வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (16:04 IST)

’’ரஜினிகாந்த் அன்று எப்படியோ இன்றும் அப்படியே!..’’. ’’காமெடி கிங்’’.கவுண்டமணி டுவீட்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத வகையில், ஒரு சூப்பர் நடிகருக்கு இணையான அந்தஸ்த்தில் கால்ஷூட் கொடுத்தவர் காமெடி கிங்  நடிகர் கவுண்டமணி. அவர் தங்களது படங்களில் நடிக்கவைக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக் கிடந்த காலமும் உண்டு.

இந்நிலையில் அவரது சாயலில் இன்று ஏராளமாம நடிகர்கள் சினிமாவில் புதுவரவாக வந்துள்ளனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் கவுண்டமணி தனக்குட் தெரிந்த நண்பர்களிடமும் இயக்குநர்களிடம் ஹாலிவுட் சினிமாக்கள் மற்றும் உலக சினிமாக்களைப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், இன்று கவுண்டமணி தனது டுவிட்டர் பக்கத்தில், சூப்பர்ஸ்டாருடன் தான் இருப்பதுபோன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு,அதில், நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த புகைப்படத்தை எனது கேலரியில் பார்க்கிறேன்@rajinikanthஅவர்கள். அன்று எப்படியோ இன்றும் அப்படியே!!! எனப் பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #gowndamani #rajiniknath #tamilcinema #comedyking