ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:34 IST)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாகவே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி  மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி, வேலூர் மற்றும் தென் கோவை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.