வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (13:07 IST)

தனியார் பள்ளிகள் இலவச கட்டாய கல்வி! – மாணவர் சேர்க்கை தொடங்கியது!

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இலவச கல்வி பெறுவதற்கான கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 8,446 தனியார் பள்ளிகளுக்கான கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக தொடங்கி நடந்து வருகிறது.

தனியார் பள்ளிகளில் 1.20 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 3 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.