செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மே 2021 (08:52 IST)

ஒட்டனந்தலில் காலில் விழ சொல்லி சாதிய வன்கொடுமை! – 8 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியலின மக்களை காலில் விழ சொல்லி சாதிய வன்கொடுமை நடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்தில் பட்டியலினத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை மற்ற சமூகத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி சாதிய வன்கொடுமை நடந்துள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து 8 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.