புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (12:27 IST)

தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் அதிகாரி

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக ‘வாட்ஸ்-அப்’பில் பேசிய உருக்கமான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ராஜி. விடுப்பு கேட்ட ராஜியை உயர் அதிகாரி ஒருவர் தேனிலவுக்கா போகிறாய் என்று கேட்டுள்ளார். மேலும் மேலதிகாரிகளின் தொடர் தொல்லையாலும், வேலைச் சுமையாலும், வேலை சுமையின் காரணமாக கணவன் மற்றும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்ள முடியாததாலும் மனஉளைச்சலில் இருந்த ராஜி காவலர்களுக்குள்ளான வாட்ஸ் ஆப் குரூப்பில் நான் மன அழுத்தத்தால் தவிக்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி பேச்சு. நான் உயிரை விடப்போகிறேன் விடைபெறுகிறேன் என்று உறுக்கமாக ஆடியோ குறிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதைப்பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ராஜி எங்கே இருக்கிறார் என்று தேடினார்கள். அவர் அண்ணாநகரில் உள்ள தனது உறவினரான போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரது வீட்டில் இருப்பதாக கண்டறியப்பட்டது. உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் ராஜியை அழைத்து சமாதானப்படுத்தினார்கள். கவுன்சிலிங் மூலம் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவர் உடனடியாக விடுமுறையில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜி தற்கொலை முடிவை கைவிட்டுவிட்டதாக தெரிகிறது.