வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (13:19 IST)

திமுக, அதிமுகவை ஓரம் கட்டுனா அடுத்து நாமதான்: அசால்டு பண்ணும் பாமக!

பாமக தரப்பில் வெளியான ஒரு அறிக்கையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாமகவை கொண்டு வந்து நிறுத்தியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
இந்நிலையில் பாமக தரப்பில் வெளியான ஒரு அறிக்கையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாமகவை கொண்டு வந்து நிறுத்த உழைத்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், பாமக போட்டியிட்ட மொத்த இடங்களில் 52.09 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த தேர்தலில் பாமகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தமிழகத்தின் 3வது பெரிய கட்சி பாமக தான் என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.