புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (11:50 IST)

சலூன் கடைகாரரிடம் தமிழில் பேசிய மோடி! – நூலகம் அமைத்ததற்கு வாழ்த்து!

இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியை சேர்ந்த சலூன் கடைக்காரரிடம் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழில் செய்து வரும் பொன்.மாரியப்பன் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

பொன். மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் தனது சலூனிலேயே நூலகம் அமைத்துள்ள மாரியப்பனின் செயலை மிகவும் பாராட்டியுள்ளார்.