புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:27 IST)

இன்னைக்கு மக்கள்கிட்ட ஒரு விஷயம் சொல்ல போறேன்! – சஸ்பென்ஸ் வைக்கும் பிரதமர்!

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மெல்ல அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு தொழில்களும், சுற்றுலாவும் முடங்கி போயுள்ள நிலையில் அவற்றிற்கு அனுமதி வேண்டி பலர் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். அதேசமயம் கொரோனா பாதிப்பு சில மாநிலங்களில் அதிகரித்து வருவதும், அதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததும் சிக்கலை அளித்து வருகின்றது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில் அவர் எதுகுறித்து பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவிலிருந்து வேகமாக குணமடைந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து கொரோனா பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்வது குறித்து அவர் பேசலாம் என்றும், அல்லது நாட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அவர் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.