செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (08:11 IST)

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

தமிழக முழுவதும் பிளஸ் டூ தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பிளஸ் டூ தேர்வு இன்று காலை முதல் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 35,185 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை 8 லட்சத்து 51,33 பேர் எழுத உள்ளனர் என்பதும் மாணவ மாணவியர் இந்த தேர்வை எந்தவித சிரமமும் இன்றி எழுதுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை போலவே புதுவையிலும் ன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது, புதுவையில் இந்த தேர்வை 14,670 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பதும் இதற்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்று பிளஸ் டூ தேர்வு தொடங்க உள்ளதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் பிரபலங்கள் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva