CUET நுழைவுத்தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
மத்திய பல்கலைக்கழங்களில் படிப்பதற்காக எழுதப்படும் CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுகலை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு CUET நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான CUET நுழைவுத்தேர்வு மே 21ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நேரடி தேர்வுகளாக நடைபெறுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்து தற்போது 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது CUET நுழைவுத் தேர்விற்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது மாணவர்கள், பெற்றோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K