1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (20:30 IST)

மத்திய அரசு’ என்பதை ’இந்திய அரசு’ என மாற்ற வேண்டும்: இயக்குநர் பேரரசு

perarasu
மத்திய அரசை தற்போது ஒன்றிய அரசு என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறிவரும் நிலையில் மத்திய அரசை இந்திய அரசு என்று கூற வேண்டும் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்
 
அஜீத் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மத்திய அரசை கடந்த சில வருடங்களாக ஒன்றிய அரசு என்று கூறி வரும் அரசியல் கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்த பேரரசு ஒன்றியம் என்பது தற்போது அரசியல் கட்சியை வளர்க்க மாறிவருகிறது என்று தெரிவித்தார் 
 
மேலும் மத்திய அரசு என்பதை இனிமேல் இந்திய அரசு என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்