செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (06:49 IST)

பிளாஸ்டிக் தடை பாரபட்சமானதா? கொதிக்கும் மக்கள்

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை பாரபட்சமானது என்றும், உள்ளூர் தொழிலை நசுக்கும் வகையில் மட்டும் இருப்பதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த தடையால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிஸ்கட் பாக்கெட்டுக்கள் முதல் தின்பண்டங்கள் வரை பிளாஸ்டிக் கவரில்தான் பேக் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த வகை கவர்கள் மீண்டும் சுழற்சி செய்ய முடியாத வகை பிளாஸ்டிக்கள். சுற்றுச்சூழலை இவ்வகை பிளாஸ்டிக் பேப்பர்கள்தான் மாசுபடுத்துகின்றன. ஆனால் இதனை தடை செய்யாமல் மீண்டும் சுழற்சி செய்யும் வகையில் உள்ள கேரிபேக்குகளை அரசு தடை செய்துள்ளது.

அதேபோல் வெளிநாட்டு குளிர்பானங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் விற்பனையாகிறது. இதனை தடை செய்யாத அரசு, உள்ளூர் நிறுவனங்கள் தயாரிக்கும் தண்ணீர் பாக்கெட் கவர்களை தடை செய்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதில் பொதுமக்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் வேண்டுகோளாக உள்ளது