வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:20 IST)

நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு: சேலத்தில் பரபரப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்

சேலத்தை அடுத்த கமலாபுரத்தில்  25 ஆண்டுகளுக்கு முன்பாக 1993 ஆம் ஆண்டு விமான நிலையம் தொடங்கப்பட்டது. சேலத்திலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து சேலத்திற்கும் இடையில் தினசரி ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று சேலம் விமான நிலையத்தின் விமான சேவை நிறுத்தப்பட்டது.

விமான நிலையம் தொடங்கப்பட்டபோது கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர். இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் 25 ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் கடந்த மார்ச்  28–ந்தேதி முதல் சேலத்தில் விமான சேவை திரும்பத் தொடரப்பட்டது. தற்போது சேலம் விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்காக வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போது ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப் படாத மக்கள் கூட்டமாக வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு திரும்பிப் போகும்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.