வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (10:04 IST)

பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு தூங்கி விழுந்த மக்கள் : வைரலாகும் வீடியோ

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேசிய மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை பரப்பி வருகின்றனர்.
இதில் பாஜகவும் காங்கிரஸும் பலவித போட்டிகளை  கையாண்டு வருகின்றனர். அடுத்த பிரதமர் மோடியா இல்லை காங்கிரஸ் தரப்பில் முன்னிறுத்தப்படும் ராகுலா என்பது பற்றி அனைவரும் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பாஜகவின் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி காணொளி காட்சியில் ஹிந்தியில் பேசினார். இந்தப் பேச்சு புரியாமல் பலர் தூங்கினர். மேலும் சிலர் செல்போனில் பேசியும், விளையாண்டும் பொழுதைக் கழித்தனர். 
ராமநாதபுர மாவட்டம் முதுகொளத்தூர், கமுதி, கடலாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜக உறுப்பினர்களுடன் மோடி கலந்துரையாடினார். ஆனால் மக்கள் பலரும் மோடியின் ஹிந்தி பேச்சு  புரியாமல் தூங்கிவிழுந்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.