வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (14:22 IST)

முதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் ? நாளை டெல்லி பயணம் !

அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று சமீபத்தில் அக்கட்ச்சியைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா குரல் கொடுத்தார். அதற்கு ஆதரவாக மற்ற சில அதிமுக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இதனையடுத்து அதிமுகவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று அதில் கட்சிக்குள் நடக்கும் பேச்சு வார்த்தைகள் எதையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிதி அயோக்  கூட்டத்தை  மோடி டெல்லியில் கூட்டியிருந்தார். அதில் தமிழக முதல்வர்  இபிஎஸ் கலந்துகொண்டார். அதில் தமிழ்நாட்டின் தேவைகள் பற்றியும், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
 
பின்னர் அப்போது பிரசாந்த் கிஷோரை சந்தித்து வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுகுறித்து ஆலோசனை கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
மேலும் அதிமுக ஆட்சி சுமூகமாக நடைபெறவும் மத்திய அமைசர்களை சந்தித்து எடப்பாடியார் உரையாடியதாகவும் செய்திகள்  வெளியானது.
 
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நாளை மாலை டெல்லி செல்லவுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அனைத்து மாநில நிதியமைச்சர் கூட்டத்தில் பன்னீர் செல்வம் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது அவர் பாஜக அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளதாகவும், தெரிகிறது.
 
சமீககாலமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு முன்னுரிமை தராமல் உள்ளதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்ற சமயத்தில் பன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்றவர் என்பதால் தற்போது அவரது ஆதரவாளர்கள் ஒற்றைத்தலைமை என்றால் அதிமுகவிற்கு  பன்னீர் செல்வம்தான் தலைவராக இருப்பார் என்றும், அதற்காக ஆயத்த வேலைகளையும், முதல்வராவதற்கான  அரசியல் சதுரங்கக்காய்களை அவர் நகர்த்தி வருவதாகவும், அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.