ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (22:21 IST)

நாங்குனேரி, விக்கிரவாண்டி: திமுக, அதிமுகவின் மெகா பிளான்

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் மூலம் ஆட்சியை அதிமுக தக்க வைத்து கொண்டாலும் இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆளுங்கட்சியின் இமேஜை மேலும் உயர்த்தும் என்பதால் தற்போது காலியாகவிருக்கும் நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டிய ஆகிய தொகுதிகளை கைப்பற்ற இப்பவே அதிமுக களமிறங்கியுள்ளது. நாங்குனேரியில் அதிமுகவில் இருந்து நாஞ்சில் அன்பழகன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் செல்வாக்கு உள்ளவர் என்பதால் இவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம்
 
அதேபோல் நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுத்தர வேண்டும் என்று திமுக தரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக இந்த தொகுதியில் உறுதியாக போட்டியிடும் என தெரிகிறது. அனேகமாக அப்பாவு இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடலாம். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அதிமுக, திமுக இரு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
 
மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றும், இது அதிமுக ஆட்சிக்கு எதிராக விழுந்த ஓட்டு அல்ல, பாஜகவுக்கு எதிரான ஓட்டு என்று கூறப்பட்டு வருவதால் அதனை உடைக்க இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளாராம் திமுக தலைவர் முக ஸ்டாலின். எனவே வலுவான வேட்பாளரை நிறுத்துவதோடு இந்த இரு தொகுதிகளிலும் வைட்டமின் 'ப' நன்கு விளையாடும் என்று தெரிகிறது. அதேபோல் இந்த இரு தொகுதியிலாவது வெற்றி பெற்று நாமும் போட்டியில் இருக்கின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று டிடிவி தினகரனும் களமிறங்கவுள்ளாராம். இன்னும் ஒருசில நாட்களில் இந்த இரு தொகுதியிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அடுத்த சில நாட்களில் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது