செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (20:09 IST)

ஓவியர் மனோகரன் தேவதாஸ் காலமானார்- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

manokaran devadass
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஓவியரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ்(86) இன்று காலமானார் . அவருக்கு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழத்தைச் சேர்ந்த பாரம்பரிய கட்டிடங்கள் வரையும் கலைஞராகவும், ஓவியராகவும் அறியப்பட்டவர் மனோகர் தேவதாஸ்.

மதுரையில் பிறந்து வளர்ந்த இவர், கிரீன் வேல் இயர்ஸ், மல்டி பேக்ட் ஆப் மை மதுரை, நிறங்களில் மொழி உள்ளிட்ட பல நூல்களை எழுதிக் குவித்துள்ளார்.

இவர் தன் 30 வயதில் கண் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  83 வயதில் முழு பார்வைத் திறனையும் இழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர் இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தன் இரங்கல் டிவீட்டில், பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் அவர்கள் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். அன்னாரின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள கலைத்துறை நண்பர்கள், உறவினர்கள், மதுரை மக்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj