1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (13:27 IST)

விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது எப்போது.? முக்கிய அப்டேட் கொடுத்த பிரேமலதா...!!

premalatha
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு வருகின்ற 9-ஆம் தேதி பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக, அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடைக்கால சிறப்பு குளிர்பான தண்ணீர் பந்தலை திருமதி.பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முழுவதும் வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தேமுதிக சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததாக தெரிவித்தார். அதேபோல தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்  திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஜூன் மாதத்தில் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம் என்று திருமதி.பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கடந்த ஒரு மாதங்களாகவே விருதுநகரில் தங்கி இருந்து  தனது தேர்தல் பணிகளை முடித்துள்ளார் என்றும் பெரும்பாலான மக்கள் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
 
சென்னையில் பொறுத்தவரை பல்வேறு நபர்களுக்கு வாக்கு பதிவு இல்லை என்ற கேள்விக்கு  தேர்தலுக்கு முன்பாகவே வாக்குச்சீட்டில் பெயர் உள்ளதா என்பதை பார்க்காமல் வாக்கு செலுத்த வரும் பொழுது தான் மக்கள் தங்கள் பெயர் உள்ளதா என பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். 
 
சென்னையில் பொருத்தவரை எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா, ஜனநாயக கடமை ஆற்றுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையா இல்லையா?
தேர்தல் ஆணையம் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மக்கள் வாக்களிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
 
இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும்  எப்படி ஆதார் கார்டு உள்ளது, அதேபோல் ஒவ்வொரு நபர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
 
நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது  கண்டிக்கத்தக்கது என தெரிவித்த பிரேமதா, இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் உடைய வார்த்தை ஒவ்வொன்றும் உன்னிப்பாக  கவனிக்கப்படக்கூடியவை என்பதால் அவர் கவனமாக பேச வேண்டும் என்றார்.

 
தேமுதிகவிற்கு தேர்தல் களத்தில் அதிமுக முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது என்றும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.