1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (09:18 IST)

டீ விலை ரூ.135, காபி விலை ரூ.180: அதிர்ச்சியில் ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வருபவர் என்பது அவரது ஃபாலோயர்கள் தெரிந்ததே

இந்த நிலையில் ப.சிதம்பரம் சற்றுமுன்னர் ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்ள காபிடே கடையில் ஒரு டீ கேட்டதாகவும், அந்த கடையின் ஊழியர் ஒரு கப் வென்னீர் மற்றும் ஒரு டீ பேக் எடுத்து வந்து வைத்து விட்டு ரூ.135 பில் கொடுத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நான் செய்தது சரியா அல்லது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காபியின் விலை என்னவென்று கேட்டதாகவும் அதற்கு அந்த ஊழியர் ரூ.180 என்று கூறியதாகவும், இவ்வளவு விலைக்கு யார் வாங்கி குடிக்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு 'அனைவரும்' என்று அந்த நபர் பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் தான் அப்டேட்டில் இல்லையா? என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.