1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (19:45 IST)

பன்னீர் உடலுக்கு நல்லதா? தீயதா?

பன்னீரை உட்கொள்வது உடலுக்கு நல்லதா? தீயதா? என்ற கேள்வி அனைவருக்கும் பொதுவாக இருப்பதுதான். இந்த கேள்விக்கான விடை பின்வருமாறு... 
 
# பன்னீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பன்னீரில் சர்க்கரையின் அளவு குறைவு.
 
# பன்னீரில் பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும்.
 
# பல் சிதைவு, ஈறு பிரச்சனைகள் மற்றும் மூட்டு பிரச்னைகளை தீர்க்கக் கூடியதாகவும் பன்னீர் இருக்கிறது.
 
# பன்னீரை காலையில் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். 
 
# பன்னீரை அதிகமாக வறுப்பதோ அல்லது பொறிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும்.
 
# உடல் மெலிந்து பலஹீனமாக இருப்பவர்கள் தாரளமாக சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.