புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (16:40 IST)

நம்ம கேப்டனும் பாராட்டிடார்ல எடப்பாடி அரசை....

சில தினங்களாக தமிழகத்தை புரட்டி எடுத்த கஜா புயல் ஒருவழியாக கரையைக் கடந்தது. தகுந்த நேரத்தில் ஆபத்து உதவியாக செயல்பட்டு தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்த தமிழக அரசு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு முகாம்களை ஏற்படுத்தி கொடுத்தது உரிய நேரத்தில் சிறப்பாகச் செயப்பட்டதை  எதிர்கட்சி தலைவர் முதற்கொண்டு அனைத்து தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசு கஜா புயலில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களைக் காப்பாற்ற முயன்றது பாராட்டுக்குறியதாகும்.
 
புயல் பாதிப்பு ஏற்படுத்திய நாட்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இரவு பகலாக உழைத்த அனைத்து அமைச்சர்களையும் தேமுதிக சார்பில் வரவேற்கின்றோம்.
 
மேலும் வேதாரண்யம் போன்ற இடங்களில் 36 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்திருகிறார்.