1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (15:34 IST)

அடுத்த 3 நாட்களுக்கு மழை... பாதிப்புகளை தாங்குமா சென்னை?

கஜா புயல் தமிழக பகுதிகளை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதிகளைத் தாண்டி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள லட்சத்தீவுகள் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது.
 
அடுத்து தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதியும், மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
 
இது வரும் நவம்பர் 19, 20 தேதிகளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதனால் வரும் நவம்பர் 19, 20, 21 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கஜா புயலில் இருந்த சென்னை தப்பித்தாலும், தர்போது வரும் மழையால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது போன்ற அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன. 
 
கஜா புயலின் மோது தமிழக மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடும் பாதிப்புகளில் இருந்து தப்பியது. எனவே, அடுத்து வரவிருக்கும் 3 நாட்கள் மழைக்கு பாதுபாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
கொஞ்சம் மழை வந்தாலே சென்னை தாங்காது... இதில் பலத்தமழை என்பதால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள். ஆனால், இதில் இருக்கும் ஆறுதல் என்னவெனில் பலத்த மட்டும்தானே தவிர காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.