1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (16:58 IST)

வைகோவுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவித்திருப்போம்: அதிமுக அமைச்சர் பதில்!

வைகோவுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவித்திருப்போம்: அதிமுக அமைச்சர் பதில்!

ஐநாவின் மனித உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிங்களர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வைகோவுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் கண்டனம் தெரிவித்திருப்போம் என கூறியுள்ளார்.


 
 
ஐநாவின் மனித உரிமைக்குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஜெனீவா சென்றிருந்த வைகோவை சிங்களர் கும்பல் ஒன்று தாக்க முயற்சித்ததாக வந்த தகவலை அடுத்து ஐநாவில் பணிபுரியும் தமிழரான ஒரு அதிகாரி, வைகோ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வரை அவரது பாதுகாப்பிற்காக சிறப்பு கமாண்டர் படை ஒன்றை நியமித்துள்ளார்.
 
இந்த சிறப்பு கமாண்டர் படையினர் வைகோவுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரை யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாத்து வருகின்றனர். இந்த பாதுகாப்பு குறித்து வைகோ கூறியபோது, எந்த ஒரு பாதுகாப்பையும் நம்புபவன் நான் இல்லை. ஒரே ஒரு புல்லட்டை எவ்வளவு பெரிய பாதுகாப்பு இருந்தாலும் ஒருவரை கொல்ல சுட்டுவிட முடியும்.
 
எனவே பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. இருந்தும் ஐநா தமிழ் அதிகாரி திருப்திக்காக இந்த பாதுகாப்பை ஏற்றுள்ளேன். எனக்கு எந்த விதத்திலும் மிரட்டல் வந்தாலும் நான் பேச வேண்டிய கருத்துக்களில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு செயல்படுவது குறித்து வைகோ ஐநாவில் பேசியதால் அவரை சிங்களர்கள் அந்த இடத்திலேயே சூழந்துகொண்டு மிரட்டியதால் விவகாரம் பெரிதானது. சிங்களர்களின் இந்த செயலுக்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
 
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஜெனீவாவில் வைகோ மீதான தாக்குதல் முயற்சியை தொடர்ந்து அவருக்கு அங்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுக்காப்பு கொடுக்கப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் நிச்சயம் கண்டனம் தெரிவித்து இருப்போம் என்றார்.