திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (19:25 IST)

டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்: அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு!

ops
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்வதாகவும் அவருடன் அவருடைய மகனும் மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை எழுந்துவரும் நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று இரவு பன்னீர்செல்வம் டெல்லி செல்ல இருப்பதாகவும் தேர்தல் கமிஷன் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக அவர் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.