1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (15:32 IST)

ஓபிஎஸ் வீட்டிற்கு வண்டி விட்ட பாஜக நிர்வாகிகள்!

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாஜக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். 

 
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேரில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாஜக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, கரு.நாகராஜன், சி.டி.ரவி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கீரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு சென்றுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது.