ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:22 IST)

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மொத்தமாக தடை: ஓபிஎஸ் கோரிக்கை

கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை. 

 
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தியது. 
 
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சமுதாய, கலாசார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.