புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:03 IST)

அடுத்த பருவமழைக்குள்.... ஸ்டாலின் அளித்த வாக்குறுதி!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். 

 
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகள் மழைநீரில் தத்தளித்தது என்பதும் போக்குவரத்து இதனால் ஸ்தம்பித்தது என்பதையும் பார்த்தோம். இதனால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
மழை நீர் தேங்கி உள்ளதால் சென்னையில் உள்ள நான்கு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். 
 
மேலும் புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று எனக்கு நேரில் வாழ்த்து சொல்லுவதை தவிருங்கள். சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.