திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (08:22 IST)

ஸ்டாலின் பெயரை பயன்படுத்த கூடாது: முரசொலி முக்கிய அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்தோடு இருந்தவரை அவருடைய தினசரி கடிதம் முரசொலியில் வெளிவந்தது. அதேபோல் முரசொலியில் இதுவரை கருணாநிதி என்ற பெயர் அச்சிடப்பட்டது இல்லை. கலைஞர் என்றும் தலைவர் என்றும் மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதேபோல் இன்று முதல் ஸ்டாலின் பெயரும் முரசொலியில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஸ்டாலின் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அவரை குறிப்பிடும்போது 'கழக செயல் தலைவர்' என்றே குறிப்பிட வேண்டும் என்று முரசொலி அறிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக ஸ்டாலினை தளபதி என்று குறிப்பிட்டு வந்த முரசொலி தற்போது கழக செயல் தலைவர்' என்று குறிப்பிட வேண்டும் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.