வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (08:01 IST)

ஒருவர் கூட இல்லை: புத்தாண்டில் முதல்முறையாக வெறிச்சோடிய மெரீனா!

ஒருவர் கூட இல்லை: புத்தாண்டில் முதல்முறையாக வெறிச்சோடிய மெரீனா!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை மெரினா கடற்கரையும் கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கூடி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது தான் 
 
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஜாலியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து வரும் நிலையில் இந்த வருடம் புத்தாண்டு தினத்தில் மெரீனாவே வெறிச்சோடி இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெரினா மற்றும் கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை என காவல் துறை தெரிவித்திருந்தது. அது மட்டுமின்றி அனைத்து பாலங்களும் நேற்று இரவு முதல் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே வரலாற்றில் முதல் முறையாக சென்னை மெரினா புத்தாண்டு தினத்தில் வெறிச்சோடி கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு தினத்தில் கூடும் சென்னை மெரினாவில் நேற்று இரவு முதல் ஒருவர்கூட இல்லை என்பதும் அதிர்ச்சியான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலைமை அடுத்த ஆண்டாவது மாற வேண்டும் என்றும் 2022ஆம் ஆண்டு புத்தாண்டை வழக்கம்போல் லட்சக்கணக்கானவர்களுடன் கொண்டாட வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்