வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (13:20 IST)

நல்லகண்ணுவுக்கு கொரோனாவா? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு இன்று காலை உடல்நல கோளாறு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
95 வயதாகும் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. சளி, காய்ச்சல் ஆகியவை இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவரது உடல்நிலை குறித்து தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் சற்றுமுன் நல்லகண்ணு அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகி உள்ளது. இதனை அறிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ’நல்லக்கண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற தகவல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கு முன் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது