ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (10:16 IST)

யங் மேஸ்ட்ரோ யுவனின் இசை படத்தை மேம்படுத்தியுள்ளது- பாராட்டித் தள்ளிய எஸ் ஜே சூர்யா!

எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் பொம்மை படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துள்ளார் யுவன்.

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசைப் பணிகளை யுவன் ஷங்கர் ராஜா முடித்துள்ளதாக நடிகர் எஸ் ஜே சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய டிவீட்டில் ‘பின்னணி இசையின் அரசன் என சொல்லப்படும் யுவன் பொம்மை படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்துள்ளார். அவரது இசை படத்திற்கு கூடுதல் சிறப்புகளை கூட்டியுள்ளது. விரைவில் உங்களை பாடல்கள் மற்றும் டிரைலரோடு சந்திக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.