புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (15:01 IST)

ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு! – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு உள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்க கோரி முன்னதாக உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அவரை பிடிக்க அவரது உறவினர்களை தொல்லை செய்யக்கூடாது என்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போலீஸார் தொந்தரவு அளிப்பதாகவும் அதனால் ராஜேந்திரபாலாஜியின் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.