திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (12:52 IST)

மழையால் புத்தகங்களை இழந்தவர்களுக்கு புதிய புத்தகங்கள்…

சென்னையில் கன மழையால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மேலும் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் பாடப் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.