வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2019 (11:47 IST)

தலைவன்னா அது ஸ்டாலின் தான்: ஒரே போடாய் போட்ட பாஜக தலைவர்!

நான் ரசித்த ஒரே தலைவன் ஸ்டாலின் தான் என பேசி  தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் மகள் திருமணம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட,  தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் எம்.ஜி.ஆருக்கு பிறகு தாம் ரசித்த ஒரே தலைவர் ஸ்டாலின் எனக் கூறினார். 
 
அவரின் இந்த கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பி.டி.அரசகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியத் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் பாஜகவினர். அரசகுமார் திமுகவில் இருந்து பாஜகவுக்கு மாறியதால், அவரது பழைய விசுவாசம் இன்னும் மாறவில்லை போல என விமர்சனமும் செய்து வருகின்றனர்.