செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (07:03 IST)

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையே வழக்கு: நாராயணசாமி!

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் புதுவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ’மோடி அரசு புதுவை வளர்ச்சி நிதியாக 15,000 கோடி கொடுத்ததாகவும் அந்த பணத்தின் ஒரு பகுதியை முதல்வர் நாராயணசாமி எடுத்துக்கொண்டு மீதியை சோனியா காந்தி குடும்பத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார் 
 
இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய நாராயணசாமி, ‘அமித்ஷா அபாண்டமாக பொய் கூறி உள்ளார் என்றும் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபிக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்
 
சோனியாகாந்தி குடும்பத்திற்கு 15,000 கோடி நிதியை நாராயணசாமி கொடுத்ததாக கூறியுள்ள அமித்ஷாவின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது