திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (16:27 IST)

என்ன பார்த்தா பேய் மாதிரி இருக்கா? குமுறும் கிரண்பேடி!

முதல்வர் என்னை பேய் என கூறியது நாகரிகமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியை பேய் என குறிப்பிட்டு பேசினார். 
 
முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிரண்பேடி. அவர் கூறியதாவது, முதலமைச்சர் என்னை பேய் என கூறியிருப்பது நாகரிகமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 
 
பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. அவை மக்களை பயமுறுத்தக்கூடியது. ஆனால் அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பதுதான். அதைத்தான் நான் செய்கிறேன் என பதிலளித்துள்ளார்.