திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (18:32 IST)

புது டெக்னிக்கா இது ? இசைக்கருவிக்குள் 100 ’பீர் , ரம்’ பாட்டில்கள் கடத்தல்! ...

புதுச்சேரி மாநிலத்தில் மதுவகைகள் மலிவு விலைக்கு கிடைக்கும் என்பதால் மற்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து மதுவகைகள் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வெளியானது.
 
இந்நிலையில் நாகை மாவட்டம்  வாஞ்ஞர் என்ற பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டுபேர் பைக்கில் டிரம் - மத்தளம் போன்ற பேண்ட் வாத்தியக் கருவிகளை வைத்திருந்தனர்.
 
போலீஸாருக்கு சந்தேகம் வரவே அதை பரிசோதித்தனர். அப்போது தில், 100 மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.