மாட்டுத்தரகர் எடப்பாடி பழனிச்சாமி: அநாகரிகமாக பேசும் நாஞ்சில் சம்பத்!

மாட்டுத்தரகர் எடப்பாடி பழனிச்சாமி: அநாகரிகமாக பேசும் நாஞ்சில் சம்பத்!


Caston| Last Modified ஞாயிறு, 19 நவம்பர் 2017 (13:27 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் மாட்டுத்தரகர் என அநாகரிகமாக விமர்சித்துள்ளார் அதிமுகவின் தினகரன் அணியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

 
 
தமிழகத்தில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து மெகா ரெய்டை நடத்திய வருமான வரித்துறை நேற்று முன்தினம் போயஸ் கார்டனுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. இது அதிமுகவின் அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது. இதற்கு டிடிவி தினகரன் அணியினர் கடுமையான எதிர்வினையை ஆற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் போயஸ் கார்டனில் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் நடந்திருக்காது என பேசப்படுகிறது. இதனால் தினகரன் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், இந்த சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி, அரசியல் பின்னணிதான் காரணம் என்றும் வித்யாசாகர் என்கிற ஒரு கவர்னரை தமிழ்நாட்டில் பொறுப்பு ஆளுநராக நியமித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸை மாட்டுத்தரகர் மாதிரி கூட்டி வைத்தது யார் என பேசியுள்ளார்.
 
மேலும் எனக்கு அருதிப்பெரும்பான்மை இருக்கிறது, ஆட்சி அமைக்க அழையுங்கள் என்று சசிகலா கடிதம் கொடுத்தப் பிறகு அழைக்காமல் தாமதப்படுத்தியது யார். ஆகவே இதில் பெரிய அரசியல் பின்னணி, அரசியல் சதி, அரசியல் வன்மம் இருக்கிறது என கூறினார் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :