டுமிலிசையான தமிழிசை: கேலி செய்பவர்களுக்கு ஒரு கேள்வி?

டுமிலிசையான தமிழிசை: கேலி செய்பவர்களுக்கு ஒரு கேள்வி?


Caston| Last Modified ஞாயிறு, 19 நவம்பர் 2017 (11:25 IST)
பாஜக மாநில தலைவராக உள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன். இவரை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்கின்றனர். தன்னை கிண்டல் செய்பவர்களை பார்த்து தமிழிசை அச்சப்படபோவதில்லை எனவும் அவர்களை பார்த்து ஒரு கேள்வியும் முன் வைக்கிறார் அவர்.

 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கின்றனர். ஒரு பெண் அரசியலில் தைரியமாக செயல்படுகிறார் என்று கூட  பார்க்காமல், ஒரு பெண் அரசியல்வாதியின் உருவத்தை வைத்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர் சிலர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியமான சமூக பார்வைக்கு இது வழி வகுக்காது.
 
இந்நிலையில் தன்னை கேலி செய்பவர்கள் பற்றி கூறியுள்ள தமிழிசை, என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். நான் அவர்களைக் கண்டு அச்சப்படுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். அவர்கள் விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் கூட தமிழிசை என்ற என் பெயரை டுமிலிசை என மாற்றினார்கள்.
 
பலர் எனது செல்பேசிக்கு அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு. இதே மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள்? என்பது மட்டுமே நான் அவர்களிடம் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :