வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (10:24 IST)

தகைசால் விருது: பரிசுத்தொகையை மீண்டும் முதல்வரிடமே கொடுத்த நல்லக்கண்ணு!

nallakkannu
சுதந்திர தின விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் விருது மற்றும் ரூபாய் 10 லட்சத்தை முதலமைச்சர் அளித்த நிலையில் அந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நல்லகண்ணு அவர்கள் முதல்வரிடமே திருப்பி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த ஆண்டிற்கான தகைசால் விருது மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு அறிவிக்கப் பட்டது என்பதும் சுதந்திர தினத்தில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் விருது மற்றும் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்
 
இதனை அடுத்து தனது பணம் ரூ.5000ஐ சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்து 5 ஆயிரத்தை நல்லகண்ணு அவர்கள் திருப்பி முதல்வரிடம் வழங்கினார் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்