புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (13:26 IST)

நாம் தமிழர் கட்சியின் சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் சீமான் இன்று திருவொற்றியூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பை அதிகாரிகள் இடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது பொது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சென்றார்
 
அங்கு அவர் அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சீமான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது