ரஜினி முத்திரை எங்களுக்கு சொந்தம்: முதல் வழக்கு பதிவாகிறதா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார். அதன் முதல் படியாக ரஜினி ரசிகர் மன்றம் என்பதை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றியுள்ளார்.
இந்த நிலையில் அவருடைய கட்சியின் பெயர், சின்னம் கொடியில் அவருடைய பாபா முத்திரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முத்திரை பாபா திரைப்படம் வெளிவந்ததில் இருந்தே ரசிகர்களிடம் மக்களிடமும் பிரபலம் என்பதால் இந்த முத்திரையை அவ்ர் கொடியிலும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த நிறுவனமான வாக்ஸ்வெப் என்ற நிறுவனம் இதே போன்ற முத்திரையை தங்கள் நிறுவனம் பயன்படுத்தி வருவதாகவும், ரஜினி இந்த முத்திரையை தொடர்ந்து பின்பற்றினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. இந்த நிறுவனத்தின் முத்திரையில் சுட்டு விரல், சுண்டு விரல் இடையே இரண்டு விரல்கள் மடக்கப்பட்டு, கட்டை விரல் மேல்நோக்கி உள்ளது. ஆனால் ரஜினியின் முத்திரையில் கட்டை விரல் மேல்நோக்கி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் அதுவே அரசியல் அறிவிப்புக்கு ரஜினி மீது தொடரப்படும் முதல் வழக்காக இருக்கும்