அடுத்த அதிரடி : ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி

Last Modified சனி, 6 ஜனவரி 2018 (11:47 IST)
அரசியலில் அடுத்த அதிரடியாக தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக நடிகர் ரஜினிகாந்த் மாற்றியுள்ளார்.

 
தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த அறிவித்துள்ள விவகாரம், தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில், தனது அரசியல் கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு ஒரு இணையதளத்தை ரஜினி உருவாக்கினார். அதில் நம்முடைய தகவலை அளித்து அதில் உறுப்பினராக நாம் மாறிவிட முடியும்.

 
இந்நிலையில், அந்த இணையத்தில் ‘அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயர் ‘ரஜினி மக்கள் மன்றம்’ என மாற்றப்பட்டுள்ளது. தனது அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் இணையதளத்தில் ரஜினிகாந்த் பெயரை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :