செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (12:04 IST)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் கடந்த மே மாதம் தமிழக அரசு நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று டாஸ்மாக் கடைகளை திறந்தது 
 
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 250.25 கோடிக்கு மது விற்பனை  நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் முதல் முதலாக தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை ரூபாய் 250 கோடியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்று முழுவதும் முழுலாக்டவுன் என்பதால் நேற்று மது பிரியர்கள் மதுக்களை வாங்கி குவித்ததால் நேற்று ஒரே நாளில் 250 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது