வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 மே 2022 (12:24 IST)

கற்றதை மதிப்பிடதான் தேர்வு.. மாணவர்களை மதிப்பிட அல்ல! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நாளை 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்கி நடைபெறுகிறது.

இதற்கான தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வினாத்தாள் வைப்பறைகள் தீவிரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “நாளை 12ம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கற்றதை மதிப்பிடதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவதற்காக அல்ல. நம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.