பல்வேறு கிராம நிலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை! – இன்று கிராம சபை கூட்டம்!
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.
மே 1 உழைப்பாளர் தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இன்று காலை 10 மணிக்கு இந்த கிராமசபை கூட்டம் தொடங்கப்படுகிறது.
கிராம சபை கூட்டங்களில் அப்பகுதியை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊராட்சி ஆண்டு வரவு- செலவு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், மத்திய – மாநில அரசுகளின் திட்டங்களுக்கான பயனாளர்கள் தேர்வு மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விவசாயம், உழவர் நல திட்டங்கள் உள்ளிட்ட கிராம நல திட்டங்கள் பலவற்றை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.