புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (08:44 IST)

சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி: வீரமணிக்க்கு முதல்வர் வாழ்த்து

திராவிட கழகத் தலைவர் வீரமணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
திராவிட கழக தலைவர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கி வீரமணி அவர்களுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலைக்கு சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி என்றும் எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழி காட்டும் திராவிட போராளி என்றும் தாய் கழகமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
சமூகநீதி போர்க்களத்தின் சளைக்காத போராளி என்றும் கலைஞரின் கொள்கை இளவல் என்றும் அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது