வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:29 IST)

நாங்களே நடத்துவோம் கிராம சபை கூட்டம்! – அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

கொரோனா காரணமாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நாளை கிராம சபை கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் தடையை மீறி திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தி வரும் அவர், கொரட்டூர், அகரவேல், நடுகுத்து வயல் உள்ளிட்ட கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரசு தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.