செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:31 IST)

ரூ.10 கோடியே 10 லட்சம் மதிப்பில் 20,புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தனர்.
 
கன்னிவாடி பேரூராட்சி, மணலூரில் மூலதன மான்ய திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சாலை சீரமைக்கும் பணி மற்றும் ஆழ்துளைக்கிணறு அமைத்து மின் மோட்டர் பொருத்தி குடிநீர விநியோகம் செய்யும் பணி மற்றும் காதக்கோட்டை பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர்
துவக்கி வைத்தனர்.
 
அதேபோல
, மூலனூர் ஊராட்சி ஒன்றியம், புஞ்சைத்தலையூர் ஊராட்சி, காத்தசாமிபாளையத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும்,
 
கருப்பன்வலசு ஊராட்சி, பட்டத்திபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் மற்றும் 
 
மேம்பாட்டுத் திட்டம், 15-வது மாநில நிதிக்குழு திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள், மற்றும்  மூலனூர் ஊராட்சி ஒன்றியம், வேளாண்பூண்டி ஊராட்சி, ஆயிக்கவுண்டன் பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக்கடை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். மேலும்
மூலனூர் பேரூராட்சி, லட்சுமி நகர், என்.எஸ்.என். மண்டபம் அருகில் வார்டு எண்.6-யில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நகரில் பூங்காவை திறந்து வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இதன் தொடர்ச்சியாக.
 
வேளாண்பூண்டி ஊராட்சி, ஆயிக்கவுண்டன் பாளையத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை திறந்தும் 
 
வேளாண்பூண்டி ஊராட்சி, ஆயிக்கவுண்டன் பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக்கடை திறந்து வைத்தார்கள். 
 
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்
கோ.மலர்விழி திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்.திமக ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி,துறை தமிழரசு, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, மற்றும் ஊராட்சி பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.