கொரோனாவோட நல்லா பழகிட்டேன்.. அதான் மாஸ்க் போடல! – செல்லூரார் விளக்கம்!
மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ மாஸ்க் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சையில் குணமடைந்து திரும்பிய அவருக்கு மதுரையில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வழக்கம்போல செயல்பட்டு வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த செய்தியாளர்கள் பேட்டிக்கு மாஸ்க் அணியாமல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நிலையில் மாஸ்க் அணியாமல் உள்ளாரே என பேசப்பட்ட நிலையில் விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ “கொரோனாவோடு நான் வாழ பழகிவிட்டேன். அதனால் மாஸ்க் அணியவில்லை” என்று கூறியுள்ளார். எனினும் அவரது விளக்கம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.